''இந்தியன் 2'' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.!  - Seithipunal
Seithipunal


ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. கமலஹாசன் நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வருகின்ற மே 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதில், இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக கையில் வாக்களித்த அடையாள அமையுடன் இருக்கின்றார். 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ''இந்தியன் 2'' திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian 2 Movie New Poster Released


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->