சர்வதேச திரைப்பட விழா.. இந்த தமிழ் படத்திற்கெல்லாம் தான் விருதுகள்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச திரைப்பட விழா 2003-லிருந்து அனைத்து உலக நாடுகள், இந்திய மற்றும் தமிழ் படங்களைத் தேர்வுச் செய்து விருதுகளை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது.

அதை தொடர்ந்து, தற்பொழுது  சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 20வது நிகழ்வு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி  டிசம்பர்22 வரை நடைப்பெற்றது. இதில் சிறந்த நடிகர்' விருதை எதார்த்த நடிப்பில் கோலூன்றி நிற்கும் நடிகர் விஜய் சேதுபதி 'மாமனிதன்' படத்திற்காகவும், 'கிடா' படத்தில் நடித்த 'பூ ராமு' அவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தமிழ் படங்களான 'கிடா' படம் முதல் விருதையும், 'கசடற தபற' படம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. சாய் பல்லவி சிறந்த நடிகைக்கான விருதை 'கார்க்கி' படத்திற்காக வாங்கியுள்ளார்.

மேலும், நட்சத்திரம் நகர்கிறது, இரவின் நிழல், ஆதார், பிகினிங், பபூன் முதலிய படங்களுக்கும் விருதுகள் கிடைத்திருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

International Film Festival awards for this Tamil film


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->