முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி நல்லதம்பி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழகை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜியின் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தாததால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. 

அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு உச்ச நீதிமன்றம் தமிழக போலீசாருக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லை என்று அதிப்தி தெரிவித்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court order ex minister rajendra balaji case handover cbi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->