'ஜெயிலர்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்! 'ஜவான்' பாணியில் 'ஜெயிலர்' - குழப்பத்தில் ரசிகர்கள்!
Jailer in Jawan style fans confusion
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயிலர்'. இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் வருகின்ற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதில் ரஜினி பேசியபோது, அவர் சொன்ன குட்டிக் கதை சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு 'ஜெயிலர்' படத்தின் ஷோகேஸ் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் ட்ரெய்லரை ஷோகேஸ் என்று அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் ''ஜவான்'' படத்துக்கும் இதே போல நேரடியாக ட்ரெய்லர் என்று குறிப்பிடாமல் 'ப்ரிவ்யூ' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே பாணியில் தற்போது 'ஜெயிலர்' குழுவினரும் ட்ரெய்லர் என்ற வார்த்தைக்கு பதில் 'ஷோகேஸ்' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.
English Summary
Jailer in Jawan style fans confusion