#Varisuaudiolaunch : கேப்பே விடாமல் விஜய் செய்த காரியம்.. மெய்சிலிர்த்த ரசிகர்கள்.!
Joney master about Vijay dance In ranjudhame song
தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் படவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்று கொண்டிருப்பதால், எக்கச்சக்கமான விஜய் ரசிகர்கள் அரங்கத்தின் வெளியே குவிந்துள்ளனர்.
இதனால், போலீஸாருக்கும், ரசிகர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், விஜய் ரசிகர்களும் தங்களது கொண்டாட்டத்தினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
மேலும், அரங்கத்தின் உள்ளே டார்ச் அடித்துக் கொண்டாடும் வீடியோவும், இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் சிலர் தளபதி விஜய்யை இந்து கடவுள் விஷ்ணுவின் தோற்றத்தில் பேனர் வைத்து கற்பூரம் காட்டி பூஜை செய்திருக்கின்றனர். இது குறித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்த நிலையில், இன்று நடந்த வாரிசு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், "ரஞ்சிதமே பாடலின் போது ஒரு நிமிடம் 20 நொடிகளுக்கு விஜய் ஒரே சாட்டில் கேப் விடாமல் ஆடி முடித்தார். ரசிகர்களுக்காக நான் செய்யும் அந்த காரியம் சிறப்பாக இருக்க வேண்டும் என அவர் இது பற்றி தெரிவித்தார்." என கூறியுள்ளார்.
English Summary
Joney master about Vijay dance In ranjudhame song