கைதி 2 எப்போது...? படத்தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ஏக்கத்தில் விதும்பும் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். 

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே பேராதரவையும் அமோக வெற்றியை பெற்று, வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனமும், லோகேஷ் கனகராஜூக்கு காரும் கமல்ஹாசன் பரிசளித்து இருந்தார். 

இந்த படம் வந்ததில் இருந்து பலரும் கைதி படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று கேட்டு வருகின்றனர். இந்த நிலையில், கைதி படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க தற்போது தயாராக இருந்தாலும், தளபதியின் படத்திற்கு பின்னரே கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaithi 2 Movie Release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->