கைதி இரண்டாம் பாகம் எப்போது.? இயக்குனர் கூறிய குட் நியூஸ்.! - Seithipunal
Seithipunal


கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தில் நரேன் தீனா ஜார்ஜ் மரியான் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த நிலையில் கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, கைதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் நடிகர் கார்த்தியும் இயக்குனர் முத்தையா விருமன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

இவர்கள் இருவரும் இந்த திரைப்படங்களை முடித்த பிறகு இருவரும் இணைந்து கைதி இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த அறிவிப்பு வரும் பொங்கலன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaithi part 2 announcement on pongal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->