" மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல " - கமலஹாசனின் குணா படம் ரீ ரிலீஸ்!! - Seithipunal
Seithipunal


கமல் நடிப்பில் வெளியான 1991ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படமான குணா திரைப்படம் ரீ ரிலீஸ்  செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தமிழில் வெற்றி பெற்ற பல படங்கள் டிஜிட்டல் வடிவில் புதுப்பித்து மீண்டும் ரீலீஸ் செய்து வரும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் சமீபத்தில் வரும் படங்கள் எதுவும் மக்களின் கவனங்களை ஈர்ப்பது இல்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா, பாபா. கமலஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான். விஜயின் கில்லி. சூர்யாவின் வாரணம் ஆயிரம் ,தனுஷின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் கமலஹாசனின் குணா  திரைப்படத்தையும் டிஜிட்டல் வடிவில் புதுப்பித்து தமிழ்நாடு முழுவதும் அதிக திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குணா திரைப்படம் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று வெளியானது. இதில் கமலஹாசன் உடன் ரோஷினி,ரேகா உள்ளிட்ட பல நடித்து இருந்தனர். சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் பெற்ற  மஞ்சுமல் பாய்ஸ் மலையாள படத்தில் குணா படத்தின் " கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் பாடல் " இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

குணா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கமலஹாசன் ரசிகர்களுக்கு உற்சாக ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan Guna film re released


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->