ஆரஞ்சு அலாட்!!! தூத்துக்குடி, திருநெல்வேலியில் கொட்டும் மழை!!! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில் இன்று மிக கனமழையும் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது. இதில்  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திருநெல்வேலியில் டவுன், ஜங்ஷன், சமாதானபுரம்,வண்ணாரப்பேட்டை,கே.டி.சி.நகர், பாளையங்கோட்டை மார்க்கெட், மகாராஜா நகர் ஆகிய இடங்களில் தற்போது கன மழை பெய்து வருகிறது.  மேலும் புறநகர் பகுதிகளான சேரன்மகாதேவி,  கங்கைகொண்டான், மூன்றடைப்பு ஆகிய இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.

கலெக்டர் சுகுமார்:

இதில் மழை பாதிப்பை சரி செய்ய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சுகுமார், தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மிக கனமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மற்றும் தொலைபேசி எண்:0462-2501070 அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் இளம் பகவத்:

தூத்துக்குடி மாநகரப் பகுதிகள், விளாத்திகுளம், முத்தையாபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று (மார்ச் 11)காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் சுமார் 1,000 நாட்டுப் படகு மற்றும் 500 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.'ஆரஞ்சு அலெர்ட்' விட்டதால் அப்பகுதியில் மக்கள் பெரும் பரபரப்புடன் காணப்படுகின்றனர்.மேலும் கலெக்டர் இளம் பகவத், நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளார் .

அவர் அவசர உதவிக்கு 94864 54714, 93840 56221 ஆகிய எண்களை மக்கள் பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Orange alert Heavy rain in Thoothukudi and Tirunelveli


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->