சூர்யா நடித்த ''கங்குவா'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ''கங்குவா''. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் திஷா பதானி, யோகி பாபு, கிங்சிலி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த திரைப்படம் 3d முறையில் சரித்திர படமாக உருவாகிறது. 10 மொழிகளில் வெளியாக உள்ள கங்குவார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

இந்நிலையில் கங்குவார் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanguva movie release update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->