ட்ரோல் மெட்டீரியல்: கங்குவா என்ற அணைந்த அடுப்பை மீண்டும் பற்றவைத்த தனஞ்செயன்!
Kanguva Thanjeyan Blue sattai maaran
ப்ளூ சட்டை மாறன் விடுத்துள்ள பதிவில், "கங்குவா விமர்சன காட்டுத்தீ அடங்கி நயன், தனுஷ் விவகாரம் கிளம்பிய நாளில்... ஜோதிகா போட்ட பதிவால் மீண்டும் டேக் ஆஃப் ஆனது கங்குவா ட்ரோல்கள்.
சரி விடுங்கப்பா. கனமழை, புஷ்பா 2, சீமான் ரஜினி மீட்டிங் பத்தி பேசுவோம் என ரூட் மாறிய நிலையில்.
தற்போது அரங்கம் பச்சை நிறுவன நிர்வாகி தனஞ்செயன் ஏகப்பட்ட யூட்யூப் சேனல்களுக்கு பேட்டிகளை தந்து கொண்டே இருக்கிறார்.
வன்மத்தை கக்குகிறார்கள், திட்டமிட்ட தாக்குதல் என்றும், பெரிய ஹீரோக்களின் ரசிகர்கள், அரசியல் கட்சியினர், சினிமா விமர்சகர்கள் என பல தரப்பை குற்றம் சாட்டி சூர்யாவிற்கு முரட்டு முட்டு தந்து வருகிறார்.
இவையெல்லாம் மீண்டும் ட்ரோல் மெட்டீரியல் ஆகி வருகிறது.
அணைந்த அடுப்பு மீண்டும் பற்ற வைக்கப்பட்டுள்ளது.
இவர் நிறுத்திய பிறகு சூர்யா, ஞானவேல் ஆகியோர் எத்தனை பேட்டிகள் தருவார்களோ?
தவறு மேல் தவறு செய்வது நாம்தான் என்பதை அவர்களும் புரிந்து கொள்ளவில்லை.
இதை எடுத்து சொல்லி புரிய வைக்க அங்கே ஒருவர் கூட இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Kanguva Thanjeyan Blue sattai maaran