திருட்டு கதையில் சிக்கிய "சொர்க்கவாசல்" - எஸ்.ஆர்.பிரபு & ஆர்.ஜே.பாலாஜி மீது நாளைய இயக்குநர் கிருஷ்ண குமார் புகார்!
Sorkavasal Story RJ Balaji SR Prabhu Krushanakumar
நாளை வெளியாகும் சொர்க்கவாசல் படம் இன்னொருவரிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டதா? பதில் சொல்வார்களா தயாரிப்பாளர் S.R.பிரபுவும், ஹீரோ RJ பாலாஜியும்?
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கித்தில் நாளை திரைக்கு வரவுள்ள சொர்க்கவாசல் திரைப்படத்தின் கதை திருட்டு கதை என்ற எழுந்துள்ளது.
1999-ல் மத்திய சிறைச்சாலையில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளதை, படத்தின் ட்ரைலர் உணர்த்தி இருந்தது.
இந்நிலையில், நாளைய இயக்குனர் கிருஷ்ண குமார், சொர்க்கவாசல் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று, பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு.. ட்ரீம் வாரியர் நிறுவனம் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரின் காணொளியில், "சைதாப்பேட்டை கிளைச்சிறையில் (Sub Jail) கைதிகளுடன் நான் சந்தித்த அனுபவங்களை கிளைச்சிறை எனும் தலைப்பில் எழுதினேன்.
முழு bounded script ஐயும் ட்ரீம் வாரியர் நிறுவன ஆபீஸில் நேரில் சென்று தந்தேன். ஆனால் இந்தக்கதை ஏற்கப்படவில்லை என email மூலம் பதில் வந்தது. தற்போது என் கதை சொர்க்கவாசல் படமாக மாறியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
அவரின் காணொளிகள் பின்வருமாறு:
English Summary
Sorkavasal Story RJ Balaji SR Prabhu Krushanakumar