பூஜையுடன் தொடங்குகிறது சிவகார்த்திகேயனின் புதிய படம் - பெயர் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக சி.பி.சக்ரவர்த்தியுடன் இணைய உள்ளார்.

இந்த படத்திற்கு பாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருந்த நிலையில் அதனை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் இணைய உள்ளார்.
இதற்கு முன்தாக நடிகர் சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் டான் படத்தில் தன்னுடைய எதிர்காலம் குறித்த புரிதல் இல்லாத கல்லூரி மாணவனின் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakarthikeyan boss movie shooting start next week


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->