கோடைகாலத்திற்கு உகந்த பழைய சாதம்.!
benefits of pazhaiya sadam
முதல் நாள் இரவு மீதி இருக்கும் உணவில் தண்ணீர் ஊற்றி மறுநாள் சாப்பிடுவது தான் பழைய சாதம். இந்த சாதத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கும் இதற்கென்று ஒரு கூட்டமே உள்ளது. இந்த சாதத்துடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது சுவையை கூட்டும். இந்த சத்தம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.
பழைய சோறில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி 12 ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிரம்பியுள்ளன.
பழைய சோறு லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால் இதை சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
பழையசோறு நோய் எதிர்ப்பு காரணிகள் அதிக அளவில் இருப்பதால் உடலை பாதுகாப்பதுடன் உடலை தாக்கும் நோய் கிருமிகளிடமிருந்தும் பாதுகாக்கிறது.
காலையில் பழைய சோறை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும் உடலில் அதிகமாக இருக்கும் உஷ்ணம் குறையும்.
ரத்த அழுத்தம் சீராகுவதுடன் உயரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை கொஞ்சம் கொஞ்சமாக தனியே செய்யவும் இந்த பழைய சாதம் உதவுகிறது.
ஒவ்வாமை பிரச்சினைகளுக்கும் தோல் தொடர்பான வியாதிகளுக்கும் பழைய சாதம் நல்ல தீர்வை தரும்.
English Summary
benefits of pazhaiya sadam