காவலர்களுக்கு நிலுவையில் உள்ள சீருடைபடி இந்த மாதத்திற்குள் வழங்கப்படும்.. அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


பெண் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஊக்குவிக்க குறைந்தபட்சம் 500 பள்ளிகளில் புகார் பெட்டி/ புகார் பெட்டி வைக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். 

புதுச்சேரி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் நமச்சிவாயத்தின் பதில் மற்றும் அறிவிப்புகள்.இந்த நிதியாண்டில் மின்துறை, ரூபாய் 18 கோடிக்கு மின்சார உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு மின் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மின் நுகர்வோர் தங்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை பதிவு செய்யவும் மற்றும் விவரங்களை பெறவும், அனைத்து நாட்களும் (24x7) 24 மணி நேரமும் இயங்கக்கூடிய, கணினி மயமாக்கபட்ட, கட்டனமில்லா தொலைபேசி 1912 எண் மூலம் அணுகக் கூடிய அழைப்பு மையம் ரூபாய் 21 லட்சத்தில் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

மின்துறையில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த காலி பணியிடங்களை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. 73 எண்ணிக்கையிலான இளநிலை பொறியாளர் தேர்வுக்கான அறிவிப்பு ஆணை 12.03.2025 அன்று வெளியிடப்பட்டது. 177 எண்ணிக்கையிலான கட்டுமான பணியாளர் அறிவிப்பு ஆணை விரைவில் வெளியிடப்பட்டு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும். மேலும் 60 போர்மென் பதவி மற்றும் 300 ஒயர்மென் பதவிகள் பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஊக்குவிக்க குறைந்தபட்சம் 500 பள்ளிகளில் புகார் பெட்டி/ புகார் பெட்டி வைக்கப்படும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போக்குவரத்து சிக்னல்கள், சிசிடிவி கேமராக்கள், பிஏ அமைப்புகள் போன்றவை நிறுவப்படும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் போலீஸ் கேடட் திட்டம் தொடங்கப்படும். மேலும் மாணவர் தன்னார்வலர்கள் போக்குவரத்து ஒழுங்குமுறை பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

குழந்தைகளிடையே போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதுச்சேரியில் ஒரு குழந்தைகள் போக்குவரத்து பூங்கா நிறுவப்படும்.முக்கியமான சந்திப்புகளில் பசுமை போக்குவரத்து போலீஸ் சாவடிகள் நிறுவப்படும்.காவல் துறையில் கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சீருடைபடி இந்த மாதத்திற்குள் வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The pending uniform allowance for the police personnel will be paid within this month Minister Namasivayams announcement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->