சோகத்தில் மூழ்கிய "KGF யாஷ்".. பிறந்தநாளன்று பறிபோன 3 உயிர்கள்.! - Seithipunal
Seithipunal


கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் பான் இந்தியா படமான கேஜிஎஃப் மூலம்  இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கடந்த சில ஆண்டுகளாக கன்னடத் திரையுலகில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் உள்ள முக்கிய முகங்களில் ஒருவராக வளம் வருகிறார். இந்தியா முழுவதும் தீவிர ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார் யாஷ்.

கேஜிஎஃப் நடிகர் யாஷ்  இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனால் அவரது ரசிகர்கள் முன்பை விட அதிக உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கட்-அவுட் வைத்த போது மின்சாரம் தாக்கி 3 ரசிகர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் லக்ஷ்மேஷ்வர் தாலுகாவில் உள்ள சுரங்கி கிராமத்தில் ஹனமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20) மற்றும் நவீன் காசி (19) ஆகிய இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karnataka actor yash fans died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->