தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை.! தனுஷின் தந்தை பரபரப்பு பேட்டி.!
Kasthuri raja about dhanush divorce
தனுஷ் - ஐஷ்வர்யா விவகாரத்து செய்யவில்லை என்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் ஆரம்பகாலம் முதலே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதிலும் பெண்கள் விஷயம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா அமெரிக்காவிற்கு சென்று அடிக்கடி ஷாப்பிங் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்த நாட்களிலெல்லாம் தனுஷ் நடிகைகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டு இருப்பாராம். அதுபோல பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ஒருவர் தனுஷ் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் கிசுகிசுக்கள் அவ்வப்போது வருவதுண்டு.
இவற்றின் உண்மை தன்மை குறித்து அவருக்கு மட்டுமே தெரியும். நிறைய திரைப்படங்களில் சமீபகாலமாக வெற்றி நடை போட்டு வரும் தனுஷ் தனது திருமண வாழ்வை ஐஸ்வர்யாவுடன் முடித்துக் கொள்வதாக சமீபத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனுஷின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துளாவது, கருத்து வேறுபாடு காரணமாக மட்டுமே தனுஷும், ஐஷ்வர்யாவும் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இது கணவன் - மனைவி இடையே வழக்கமாக நடைபெறும் குடும்ப சண்டைதான். இது விவகாரத்து அல்ல. தனுஷும் ஐஷ்வர்யாவும் தற்போது சென்னையில் இல்லை. இருவரும் ஐதராபாத்தில் இருக்கிறார்கள். இருவரையும் போனில் தொடர்பு கொண்டு பேசி, சில அறிவுரைகளை வழங்கியுள்ளேன், என கூறினார்.
English Summary
Kasthuri raja about dhanush divorce