கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ''ரகு தாத்தா'' ரிலீஸ் அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal



தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து, நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயாநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த 'மாமன்னன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது. 

இதனை அடுத்து சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ரகு தாத்தா''. இந்த திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ரமேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

யாமினி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த திரைப்படம் சுகந்திர நாளான வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பாளர் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Keerthi Suresh movie Raghu thatha release update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->