அரசியலில் இணையபோவது குறித்து.. நானி பட நடிகர் தீவிரம்.!  - Seithipunal
Seithipunal


அரசியல் கட்சியில் இணைவது பற்றி நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். 

கன்னடம் மற்றும் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் கிச்சா சுதீப். தமிழில் சமந்தா மற்றும் நானி நடித்த நான் ஈ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இவர் தென் இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

கடந்த ஆண்டு கிச்சா சுதீப் நடிப்பில் விக்ராந்த் ரோனா பான் இந்தியா திரைப்படம் வெளியாகியது. இந்தத் திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வசூல் மழையை பொழிந்தது. தற்போது, கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. 

எனவே நடிகர் கிச்சா சுதீப் அரசியல் கட்சியின் இணைய போவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். அதில், "எனது பல நண்பர்கள் அரசியல் கட்சியில் இருந்தவாறு என்னை அழைக்கிறார்கள். ஆனால், அரசியல் கட்சியில் சேராமலேயே என்னால் மக்களுக்கு உதவ முடியும் எனும்போது நான் ஏன் அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kichaan sudheep about politics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->