வடிவேலுவை போல் எஸ். ஜே. சூர்யாவுக்கு வந்த சிக்கல்.! தலைவருக்கே ஆப்பா.?!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இன்று பிஸியாக இருக்கும் நடிகர் எஸ் ஜே சூர்யா. கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல பரிமாணங்களில் தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு இவரது நடிப்புக்கு மார்க்கெட் எகிறி இருக்கிறது.

தற்போது எஸ் ஜே சூர்யாவிற்கு  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ரூபத்தில் புதிய சிக்கல் ஒன்று வந்திருக்கிறது. இவரும் வைகைப்புயல் வடிவேலுவை போலவே ஒரு மிகப்பெரிய சிக்கலில் சிக்கியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சங்கருக்குமிடையே ஏற்பட்ட ஒரு பிரச்சனை தொடர்பாக இயக்குனர் சங்கர் வடிவேலுவுக்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தார். இதன் காரணமாக அவர் 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடிக்க முடியாத நிலை உருவானது. 10 வருடங்கள் கழித்து தற்போது தான் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் மறுபடியும் நடிக்க வந்திருக்கிறார்.

எஸ் ஜே சூர்யா விற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சில வருடங்களுக்கு முன் ஒருத்தரை படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அப்போது அந்தப் படம் நடைபெறாததால் எஸ் ஜே சூர்யா அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அவர் இருக்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அந்த நேரத்தில் தெரிவித்துள்ளார். 

தற்போது எஸ் ஜே சூர்யா மிகப்பெரிய நடிகராகிவிட்ட நிலையில் அவரிடம் புதிய படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார். அவரும் தற்போது தனது மார்க்கெட் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால் ஞானவேல் ராஜா பழைய சம்பளத்தை தான் தருவேன் என அவரிடம் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த எஸ் ஜே சூர்யா அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்த போது அதையும் வட்டியோடு கொடுக்க வேண்டும் என கூறி இருக்கிறாராம். இதனால் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் எஸ் ஜே சூர்யா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kollywood fame director and actor in big trouble with producer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->