பிரியா பவானி சங்கருடன் 'அந்த' பாடலுக்கு மேடையில் நடனமாடிய KPY பாலா.! ருத்ரன் பட இசை விழாவில் நடந்த 'கூல்' சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கிய இவர்  நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த பிரபலமானார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்த மீகாமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அதனைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடித்து வருகிறார். பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இவர் ராகவா லாரன்ஸுடன் நடித்திருக்கும் திரைப்படம்  ருத்ரன். இந்தத் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வின்போது  நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவம்  தற்போது வீடியோவாக இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது

ருத்ரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது  மேடையிலிருந்த பிரியா பவானி சங்கரிடம் அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால் என்ற ட்ரெண்டிங்கான பாடலுக்கு  நடனமாடுமாறு கிகி விஜய் கேட்டுக் கொண்டார். படத்தில் ராகவா மாஸ்டருடன் ஆடி இருக்கிறேன் என பிரியா பவானி சங்கர் கூறினார்.

ஆனால் அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவு  கேபி ஒய் பாலா  பிரியா பவானி சங்கரிடம் சென்று  ஓவர் பர்பாமென்ஸ் செய்து அவரை ஷாக் ஆக்கிவிட்டார். ராகவா லாரன்ஸ் அவரது அம்மா மற்றும் ரசிகர்கள் அனைவரும்  ஷாக் ஆகி ரசித்த அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kpy bala shocks priya bhavani shankar in rudran audio launch


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->