தாமதமாக பிரியாணி வாங்கி வந்ததால் கணவன் மனைவியிடையே தகராறு! மனைவி தூக்கிட்டு தற்*கொலை – போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மீனா (வயது 36). இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். ரமேஷ், அந்த பகுதியில் ஒரு வீடு வாங்கி அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று மதியம், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி கொத்தனாரிடம் கொடுத்து, பிறகு வீட்டிற்கு வந்தார். அப்போது மீனா சமையல் செய்யவில்லை என்பதற்காக இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், ரமேஷ் மதியம் 1 மணியளவில் வில்லியனூருக்கு சென்று பிரியாணி வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றார். பிற்பகல் 3 மணிக்கு அவர் பிரியாணியுடன் வீடு திரும்பியபோதும், மீனா கோபத்தில் சாப்பிடாமல் இருந்ததாக தெரிகிறது.

பின்னர், ரமேஷ் வீட்டைவிட்டு வெளியே சென்று மாலை மீண்டும் வீடு திரும்பியபோது, மீனா புடவியால் மின் விசிறியில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் உதவியுடன் மீனாவை கீழே இறக்கி, வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மீனாவின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband and wife had a fight because they bought biryani late Wife committed suicide by hanging herself Police investigating


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->