திரையுலகமே அதிர்ச்சி.. 60 படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் உறக்கத்திலேயே மரணம்..!
Ks sethumathavan death today
சென்னை இயக்குனர் காலனியில் உள்ள வீட்டில் பிரபல இயக்குநர் கேஎஸ் மாதவன் உயிரிழந்துள்ளார்.
கே எஸ் மாதவன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த 2009ஆம் ஆண்டு இவர் ஜெஸ்ஸி டேனியல் விருது பெற்றுள்ளார். அனுபவங்கள் பளிச்சென்று, ஓடாவிலிருந்து, ஒப்பல், சட்ட காரி, அரை நாழிகை நேரம் போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் மலையாள நாவல்களை திரைப்படங்களாக மாற்றுவதில் கவனம் செலுத்தி வந்தார். பாலக்காட்டில் பிறந்த இவர் விக்டோரியா கல்லூரியில் பட்டம் பெற்று கே.ராம்நாத்துக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
வீர விஜயா என்ற தனது முதல் படத்தை 1960இல் இயக்கினார். இதுவரை 60 படங்களை சேதுமாதவன் இயக்கியுள்ளார். தமிழுக்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை முதன் முதலில் கொண்டு வந்தவர் கேஎஸ் சேதுமாதவன் தான். தற்போது சென்னை இயக்குனர் காலணிகள் அவர் தனது இறுதிக் காலத்தை கழித்து வந்துள்ளார். இரவில் தூங்கும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
English Summary
Ks sethumathavan death today