மொய்தீன் பாயாகா சூப்பர் ஸ்டார் ரஜினி.. 'லால் சலாம்' படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரல்.! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்திற்கு லால் சலாம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் ரஜினிகாந்தின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்க அவருடன் ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். லால் சலாம் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். லால் சலாம் திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து படத்திற்கான வேலைகளை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மும்முறமாக செய்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்டப்படிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார்.

இந்த நிலையில் லால் சலாம் படத்தின் முக்கிய அறிவிப்பு  நேற்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lal salam movie Rajini 1St look poster release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->