போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் அசாமில் ரூ.24.32 கோடி பறிமுதல்; நடவடிக்கை தொடரும் என அமித்ஷா அவிவிப்புஅறிவிப்பு..!
Amit Shah said that the action against drugs will continue
போதைப்பொருட்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முழு பலத்துடன் போதைப்பொருள் கும்பல்களை ஒழித்து வருகிறது எனவும், போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கான அரசின் நடவடிக்கைகளில் அசாமில் ரூ.24.32 கோடி மதிப்புள்ள 30.4 கிலோ மெத்தமெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் போது 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், போதைப்பொருட்களுக்கு எதிரான தங்களின் நடவடிக்கைகள் தொடரும் எனவும், இந்த பெரிய நவடிக்கை எடுத்து என்.சி.பி, அசாம் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப் க்கு வாழ்த்துகள் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
English Summary
Amit Shah said that the action against drugs will continue