பீஹாரில் இடி, மின்னல், மழை, சூறைக்காற்று: உயிரிழந்த 19 பேருக்கு தலா ரூ.04 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


பீஹாரின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துவருகிறது. இந்த இடியுடன் கூடிய மழை மற்றும் சூறைக்காற்று, ஆலங்கட்டி மழை காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் மாநிலத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீஹாரில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது. மாநிலத்தில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும்  பெய்துள்ளது.

இதன் காரணமாக பெங்குசாராய் மாவட்டத்தில் 05 பேரும், தர்பங்கா மாவட்டத்தில் 05 பேரும்,மதுபானி மாவட்டத்தில் 03 பேரும், சஹர்சா மற்றும் சமஸ்திபூரில் தலா 02 பேரும், லக்கிசராய் மற்றும் கயா மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மழையினால் ஏராளமான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. ஆலங்கட்டி மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வரும் 12-ஆம் தேதி வரை, பல இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசும், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இந்த இயற்கைச் சீற்றம் காரணமாக உயிரிழந்துள்ள 19  மாநில முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளதுடன்,  அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.04 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், பயிர் சேதம் மற்றும் கால்நடைகள் இறப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 lakhs compensation announced for 19 people died in heavy rains and thunderstorms in Bihar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->