லோகேஷ் படத்தில் வில்லனாகவுள்ள லாரன்ஸ்.? எந்த படத்தில் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


 

ருத்ரன் மற்றும் சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து, வெற்றிமாறன் எழுதும் கதையில் செந்தில்குமார் இயக்க உள்ள அதிகாரம் படத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்த திரைப்படத்திற்கு பின் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் தான் கைதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகியது. 

லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கிய போது அதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸை நடிக்க அழைத்துள்ளார். ஆனால் கால்சீட் பிரச்சினையால் லாரன்சால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்து மிகப்பெரிய கால் தடம் பதித்தார். 

அடுத்ததாக கைதி 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க லாரன்ஸுக்கு லோகேஷ் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பையும் லாரன்ஸ் மிஸ் பண்ணாமல் நடித்து பெயர் வாங்குவாரா என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lawrance may villain in kaithi 2


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->