'லியோ' வழக்கு ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்பட லியோ. அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் என பலர் நடித்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். 

அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வருகின்ற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் எனவும், சிறப்பு காட்சி காலை 9:00 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1:30 மணிக்கு முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் அரசு உத்தரவு பிறப்பித்தது. 

மேலும் சிறப்பு காட்சிகள் திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதை கண்காணிப்பதற்காக முதன்மைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு குழு அமைக்க உத்தரவு பிறப்பித்தார். 

இதனை அடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று லியோ திரைப்படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் 9 மணி காட்சியை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில், 19ஆம் தேதி 2 சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த நிலையில் ஒரு காட்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் 9 மணிக்கு தான் திரையிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்கு மனுதாரர் தரப்பில், ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிகள் இடையே 45 நிமிடம் இடைவெளி விட வேண்டும் மற்றும் படத்தின் இடையில் 20 நிமிடம் இடைவெளி விட வேண்டும் இந்த நேரத்தினை சேர்க்கும்போது 18 மணி நேரத்திற்கு மேலாகிறது. 

9 மணிக்கு காட்சிகளை துவங்கி 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என்றால் 5 காட்சிகளை திரையிட முடியாது. இதனால் 7 மணிக்கு காட்சிகளை திரையிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 

அதே நேரத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் காட்சிகளை திரையிட ஒழுங்குபடுத்துவது குறித்து மதுரை கிளை நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த வழக்கையும் இந்த வழக்குடன் சேர்த்து தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மதுரை வழக்கை பார்த்துவிட்டு இந்த வழக்கு விசாரணை நாளை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo case update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->