லியோ 2 குறித்த தரமான அப்டேட்! லியோ 2 கதை தயாராக உள்ளது - லோகேஷ் கனகராஜ்! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் இரண்டாம் பாகத்திற்கான கதையை தயாராக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழில் வெற்றி பெற்ற எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலையில்லா பட்டதாரி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.

சூர்யாவின் சிங்கம், லாரன்ஸ்சின் காஞ்சனா 3 வெளியாகி உள்ளது. தற்போது இந்தியன் 2 பாகம் தயாராகி வெளியாக இருக்கிறது. ரஜினியின் ஜெயிலர், கார்த்திக்கின் கைதி, சர்தார் ஆகிய படங்களில் இரண்டாம் பாகங்களும் தயாராக உள்ளது.

இந்த நிலையில் விஜயின் லியோ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் முயற்சி நடக்கிறது. இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் கூறும்போது லியோ 2ம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளது என்றும் முதல் பாகத்தில் சொல்லாத பல விஷயங்கள் இரண்டாம் பாகத்தில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய இன்னும் ஒரு படத்தோடு சினிமா விட்டு விலகப் போவதாக அறிவித்து விட்டதால் லியோ இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பது கேள்விக்குறியாக உள்ளது. விஜய் நடிக்க விட்டால் வேறு கதாநாயகன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leo movie part 2 update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->