லியோ படத்தின் கதை இதுதான்! சர்ப்ரைஸ், சஸ்பென்ஸ்! செம்ம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்த நிலையில், இந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து பேசி உள்ளார்.

சென்னை தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம், மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 

அதில் 'லியோ படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும்' என்று ஒரு மாணவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "லியோ படத்தின் இரண்டாவது பாடல் இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. கொஞ்ச காலம் ஆகும். ஒரு வழக்கமான திரைப்படம் இல்லை. கைதி திரைப்படம் போன்ற ஒரு திரைப்படமாக இது இருக்கும்" என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

அதாவது கைதி படத்தில் பாடல்கள் எதுவும் இல்லாதது போலவே, இந்த படத்திலும் பாடல் இருக்காது, சுவாரசியமான ஆக்சன் திரில்லர் கதைக்களமாக இந்த படம் இருக்கும் என்பதை லோகேஷ் கனகராஜ் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

மேலும், லியோ திரைப்படம் லோகேஷ் சினிமா யூனிவேர்சலின் ஒரு அங்கமாக இருக்குமா? என்ற கேள்வி கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், 

"இப்போதே லியோ திரைப்படம் எப்படி இருக்கும், கதை என்ன? என்பதை சொல்லிட்டா, திரைப்படம் பார்க்கும் உங்களுக்கு எந்த சுவாரசியமும் இருக்காது என்றார். 

ஆக, லியோ படத்தில் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ், சஸ்பென்ஸ் காத்திருப்பதை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ், "நடிகர் விஜய் குறித்து பேச வேண்டும் என்றால் இந்த மேடை போதாது. நான் பொதுவாக அனைத்து நடிகர்களையும் சார் என்று தான் அழைப்பேன். ஆனால் நடிகர் விஜயை மட்டும் அண்ணா என்று தான் அழைப்பேன் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo Movie Story kaithi LCU Second Single Lokesh Kanagaraj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->