லியோ வெற்றி விழா - மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய்.! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தின் வெற்றி விழா தற்பொழுது சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவில், பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸான என்ட்ரி கொடுத்துள்ளார். கடந்த முறை 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்களுக்கு இடையில் நடந்து வந்தது போலவே, இந்த முறையும் ரசிகர்கள் மத்தியில் என்ட்ரி கொடுத்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல், விஜய் நெற்றியில் குங்குமம் விபூதியோடு வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில், நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகான் உள்ளிடோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இந்த விழாவில், அரசியல் எண்ட்ரி, 'லியோ' சர்ச்சைகள், ரஜினிக்கு பதிலடி கொடுக்க குட்டி ஸ்டோரி என்ற விஜயின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leo movie victory celebration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->