'லியோ' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு? வெளியான மாஸ் அப்டேட்!
Leo trailer release Mass update
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ' இதில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்டர் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாவது பாடலான 'படாஸ்' பாடல் வெளியாகி அதிவேகமாக பரலானது.
இந்நிலையில் 'லியோ' படத்தின் டிரைலர் வருகின்ற 5 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
English Summary
Leo trailer release Mass update