லியோ படத்தில் கமல்? - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லோகேஷ்.!
lokesh kanakaraj answer actor kamal act leo movie
லியோ படத்தில் கமல்? - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லோகேஷ்.!
நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தினமும் ஒரு அப்டேட் என்று சமூக வலைதளங்களில் ‘லியோ’ திரைப்படம் குறித்த அப்டேட்கள் பகிரப்பட்டு வருகிறது.
![](https://img.seithipunal.com/media/leo 0610-f2rky.jpg)
இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம், லியோ திரைப்படம் லோகி யுனிவர்ஸின் ஒரு பகுதியா? இதில் கமல் நடித்திருக்கிறாரா? அவர் குரல் இடம் பெற்றிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள லோகேஷ் கனகராஜ், "படம் வர இன்னும் 10 நாட்கள் தான் உள்ளது. படம் வந்தபின் பார்த்து தெரிந்து கொள்ளவும் என்று பதில் அளித்துள்ளார். இருப்பினும் இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரமில் நடித்திருந்த கமல் உள்ளிட்டவர்களின் குரல் இடம் பெற்று இருக்கலாம், என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
English Summary
lokesh kanakaraj answer actor kamal act leo movie