ஜெயம் ரவி நடிக்கவுள்ள 'பிரதர்' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்!
look poster Jayam Ravi film Brother
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'பிரதர்' படத்தின் முதல் பார்வை போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவான 'இறைவன்' படம் இந்த மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து மோகன்ராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'தனி ஒருவன் பாகம்2' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள படம் குறித்து அறிவித்து வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க உள்ளார். 'பிரதர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் உருவாகவுள்ளது.
English Summary
look poster Jayam Ravi film Brother