நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த யூட்யூபர் மதன் கௌரி.! அவரே வெளியிட்ட திருமண புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தனது யூடியூப் வீடியோக்களின் மூலம் பிரபலமடைந்தவர் தான் மதன் கௌரி. இவர் பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை வீடியோக்களாக பதிவிட்டு வருவார். இவர் சினிமா நடிகர்களைப் போலவே மிகவும் புகழ்பெற்றவர். 

சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா கார் கம்பெனியின் ஓனர் எலான் மஸ்க்கை டேக் செய்து இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை எப்பொழுது கொண்டு வருவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு எலான் மஸ்க் இந்தியாவில் வரி விதிப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் தற்போது முடியவில்லை விரைவில் வரும் என்று பதிலளித்தார். 

இது பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்த நிகழ்வாகும். அதன்பின் அவருக்கு வழக்கத்தை விட அதிக பாலோயர்கள் கிடைக்க ஆரம்பித்தனர். அவர் பள்ளிக் காலத்திலிருந்து ஒரு பெண்ணை காதலித்து வந்தார். தனது தவறினால் அந்தப் பெண் தன்னை விட்டு சென்றதாக அவரே தெரிவித்து இருந்தார்.

சில நாட்களுக்கு முன்புதான் தன் காதலியை மீண்டும் சந்தித்து மன்னிப்பு கேட்டு இருவரும் ஒன்றாக இணைந்து விட்டோம் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவரது காதலியுடன் அவருக்கு நேற்று திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madam Gowri YouTuber getting married


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->