ஜெய் பீம் திரைப்பட வழக்கு.!! நீதிமன்ற உத்தரவால் சூர்யாவுக்கு நெருக்கடி.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படத்தில் நாடோடி பழங்குடியின சமுதாயத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாக கூறி இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நாடோடி பழங்குடியின சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகேசன் தாக்கல் செய்த மனுவில் தன்னுடைய புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணையின் போது எதிர் மனுதாரராக நடிகர் சூர்யா மற்றும் ஞானவேல் ஆகியோரை சேர்க்காததை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் எதிர் மனுதாரராக சேர்த்து புதிய மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தது.

இதனை அடுத்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்து தாக்கல் செய்த புதிய மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகர் குற்றப்பிரிவு போலீசார், நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ராஜா ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC orders actor Suriya to respond in 2weeks in JaiBhim movie case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->