உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற புதிய சாதனை படைத்த 'மகாராஜா'! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜாவை, இயக்குநர் நித்திலன் இயக்கினார்.

ஒரு குப்பைத்தொட்டியை கருப்பொருளாக கொண்டு படத்தை கையாண்ட இயக்குநர் நித்திலன், இந்த படத்தில் அடுத்தடுத்த திருப்புமுனைகளை அளித்து, கிளைமேக்ஸில் ரசிகர்களின்  மனதை வென்றார்.மேலும் இந்த  படத்தில் விஜய் சேதுபதி, நட்டி, அருள்தாஸ், பாரதிராஜா, , சிங்கம் புலி, மம்தா மோகன் தாஸ்,அபிராமி உள்ளிட்டோர்  சிறப்பாக நடித்து படத்திற்கு உயிரூட்டியிருந்தனர்.

இதற்கிடையே இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி, ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்தது. இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு மறக்க முடியாத மைல் கல்லாக மகாராஜா மாறியுள்ளது. இதனை தொடர்ந்து ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது.

இதன்மூலம்  உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்த நிலையில்,  2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharaja has set a new record as the most viewed film worldwide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->