அடடே.. ஜே.ஜே பட அக்கா நடிகையின் கணவர் பிரபல வில்லன் நடிகரா.?! ஆச்சர்ய தகவல்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகர் அவினாஷ். சந்திரமுகி திரைப்படத்தில் ராமச்சந்திர ஆச்சாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வரை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒருவராக இருக்கிறார். 

கார்த்தி நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகிய சிறுத்தை படத்தில் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் மிரட்டி எடுத்திருப்பார். தனது திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை அவினாஷ் நிலைநாட்டியுள்ளார். 

நிறைய படங்களில் அவர் நடித்து இருந்தாலும் கூட சிறுத்தை படத்தின் மூலம்தான் அவர் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார். ஜேஜே திரைப் படத்தில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்த மாளவிகா தான் இவருடைய மனைவி. இந்த விஷயம் பலருக்கும் தெரியாது. 

மாளவிகாஆறு, ஜெயம்கொண்டான், கண்மணி என் காதலி, ஆதி, வந்தான் வென்றான் உள்ளிட்ட நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

malavika and avinash photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->