மம்மூட்டியின் 'காதல்' படத்துக்குத் தடையா? வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஜியோ பேபி. இவர் மம்முட்டி மற்றும் ஜோதிகா இருவரையும் முக்கிய கதாபாத்திரமாக கொண்டு 'காதல் தி கோர்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் (மம்முட்டி) தன் மனைவியுடன் மனைவி (ஜோதிகா) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஒரு நாள் தேவாலயத்திற்கு சென்று வீடு திரும்பும் போது ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தார். 

ஆனால் சில நாட்களில் அவரது மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். விவாகரத்துக்கான காரணமாக, ஜார்ஜ் கடந்த சில வருடங்களாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாக அவரது மனைவி தெரிவிக்கிறார். 

தன் பாலின உணர்வாளர்களின் குடும்பத்தினர் அவர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற கேள்வியுடன் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் 'காதல் தி கோர்'. 

நடிகர் மம்முட்டி வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நிலையில் முதன் முறையாக இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் கத்தார், குவைத் மற்றும் அமீர நாடுகளில் இந்த திரைப்படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mammootty movie ban 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->