ஆசையாக கேட்ட ரஜினிகாந்த்.. மறுப்பு தெரிவித்த மணிரத்தினம்.? காரணம் என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெய்ராம், பார்த்திபன், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சோழர்களுடைய வரலாற்றை பேசும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன்.? என்பதற்கு இயக்குனர் மணிரத்தினம் விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, 'பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டுமென ரஜினிகாந்த் அன்புடன் கேட்டது உண்மைதான். இது கதை பெரிய கதாபாத்திரங்களை கொண்டது. எல்லாவற்றுக்கும் மத்தியில் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரை கொண்டு வருவது சரியாக இருக்காது என்பதால் தான் வேண்டாம் என மறுத்து விட்டேன்' என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maniratnam explain to Rajini don't act in ponniyin Selvan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->