நடிகர் சிவகார்த்திகேயன் இல்லாமல் ஆரம்பமான படப்பிடிப்பு.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் இல்லாமல் ஆரம்பமான படப்பிடிப்பு.! நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வந்தவர் சிவகார்த்திகேயன். தற்போது அவர் பிரபல நடிகாராக வலம் வருகிறார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் ‘மாவீரன்’, ‘அயலான்’ படங்களை முடித்து விட்டு தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 21வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரில் தொடங்கியது. ஆனால், உச்சி மாநாடு காரணமாக காஷ்மீர் படப்பிடிப்பு ரத்தானது. தற்போது மீண்டும் காஷ்மீரில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு தொடங்கியதை தெரிவித்திருந்த ராஜ்குமார், நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் இந்த காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை, அவர் இன்னும் சென்னையில் இருக்கிறார் என்பதையும் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு காஷ்மீர் கிளம்ப இருக்கும் சிவகார்த்திகேயன் பின்பு ‘மாவீரன்’ படத்தின் வெளியீட்டிற்காக ஜூலை முதல் வாரத்தில் சென்னை வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

movie shoot start without sivakarthikeyan in kashmeer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->