வேட்டையன் படத்தின் 2 வது பாடல் - மாஸ் அப்டேட் கொடுத்த அனிருத்.!
music director aniruth announce vettaiyan movie 2nd song
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை, 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் அக்டோபர் மாதம் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளதால், சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளதாவது:- "வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் நாளை மறுநாள் வெளியாகும்" என்று குறிப்பிட்டு, பாடலின் புரோமோ வீடியோவை பகிர்ந்துள்ளார்.
English Summary
music director aniruth announce vettaiyan movie 2nd song