மீண்டும் போலிஸாக நடிக்கும் நட்டி நட்ராஜ்.! அந்தமானில் நடக்கும் ஷூட்டிங்.!
Natti natraj in KP dhanasekar Movie
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நட்டி நடராஜ் கடைசியாக தனுஷின் கர்ணன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்ததையடுத்து பலரும் அவரது நடிப்பை பாராட்டினர். இந்நிலையில் தற்போது நட்டி நடராஜ் அடுத்ததாக சைக்கோ திரில்லர் கதை கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையமைக்கவுள்ளார். மேலும், இந்த படத்தை வி.எம் முனிவேலன் புரோடஷ்சன் சார்பில் தயாரிக்கிறார்.
அடுத்ததாக நட்டி நடராஜ் கே.பி.தனசேகர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் போலிஸாக நடிக்க இருக்கிறார் என்றும் இந்த திரைப்படத்தில் அவருடன் ராம்கி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்து வருவதாகவும், இதற்கான ஷூட்டிங் அந்தமானில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Natti natraj in KP dhanasekar Movie