தனது குழந்தைகளுக்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் கடந்த மாதம் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, திருமணம் ஆகிய நான்கு மாதங்களே ஆன நிலையில் அவர்கள் வாடகை தாயின் மூலமாக குழந்தை பெற்றதாக கூறப்பட்டது. இது குறித்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் இது குறித்த தகவல்கள் அடங்கிய கடிதத்தை சுகாதாரத்துறையிடம் நயன்தாரா ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

சுகாதாரத்துறை சார்பில் வெளியாகி உள்ள தகவலில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் பதிவு திருமணம் ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்திருந்தால் அது பற்றி சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படும். இந்த இரட்டை குழந்தைகளை சுமந்த வாடகை தாய் விரைவில் கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்படுவார்." என்று தெரிவிக்கப்பட்டது. நடிகை நயன் தாராவுக்கு வரும் 18 ஆம் தேதி பிறந்த நாள் வரவுள்ளது.

இந்த நிலையில், தங்களது குழந்தைகளின் நலனுக்காக ஆண்டு தோறும் பின்பற்றப்படுகின்ற வழக்கத்தை நடிகை நயன்தாரா மாற்றிக் கொண்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் விக்கி- நயன் ஜோடி அவரது பிறந்தநாளுக்கு வெளிநாடு சென்று கொண்டாடும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தாண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டுமென அந்த திட்டத்தை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara cancel plan about her birthday 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->