இனி நோ நடிப்பு... முழு தாயாக இருக்க விரும்பும் நயன்தாரா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கு மாதங்களில் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. 

அவர்கள் இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விட்டதாகவும் வாடகை தாய் மூலமாக தற்போது குழந்தை பெற்றுக் கொண்டு இருப்பதாகவும் நயன்தாரா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதிகப்படியான படங்களில் கமிட் ஆகாமல் நடிகை நயன்தாரா இருந்து வருகின்றார்.

ஏற்கனவே கமிட் செய்த திரைப்படங்களில் மட்டும் தான் நயன்தாரா நடித்து வருகின்றார். புதிய படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். குழந்தை பிறந்ததிலிருந்து நயன்தாரா படு பிஸியாக மாறிவிட்டார்.

அந்த குழந்தைகளை பார்த்துக்கொள்ள மூன்று வேலையாட்கள் இருந்தும் கூட நயன்தாரா முழுக்க முழுக்க குழந்தைகளுடன் இருக்க விரும்பும் காரணத்தால் இன்னும் ஒரு வருட காலத்திற்கு திரைப்படங்களில் இருந்து நடிப்பதில் ஒதுங்கி இருக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தான் அவர் புதிய படங்களில் கம்மிட் ஆகாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara gape for 1 year from acting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->