முதல் முறையாக நயன்தாரா விக்கியின் குழந்தைகள் புகைப்படம்.! இணையத்தில் வைரல்.! - Seithipunal
Seithipunal


நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் சில மாதங்களுக்கு முன் இரட்டை குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து, திருமணம் ஆகிய நான்கு மாதங்களே ஆன நிலையில் அவர்கள் வாடகை தாயின் மூலமாக குழந்தை பெற்றதாக கூறப்பட்டது. இது குறித்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் இது குறித்த தகவல்கள் அடங்கிய கடிதத்தை சுகாதாரத்துறையிடம் நயன்தாரா ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

தற்போது நடிகை நயன்தாரா ஷாருக்கான் உடன் சேர்ந்து ஜாவான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகின்ற நிலையில் இதில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பதற்காக மும்பையில் குழந்தைகள் மற்றும் கணவர் விக்னேஷ் சிவனுடன் தங்கி இருந்த நயன்தாரா தற்போது சென்னை திரும்பியுள்ளார். இவர்கள் இருவரும் மும்பை ஏர்போர்ட்டில் தங்களது இரு குழந்தைகளுடன் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. முதன்முறையாக நயன்தாரா குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara Vigneshsivan Twinbabies babies photos Viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->