படையப்பாவில் நீலாம்பரியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் இவ்வளவா.?! அப்பவே அதிக சம்பளம் வாங்கிய நடிகை.! - Seithipunal
Seithipunal


தமிழில் மிகவும் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தனது வசீகர தோற்றத்தால் பிரபலமாக பேசப்பட்ட நடிகையாகும். ராஜா எங்க ராஜா என்ற திரைப்படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த பொழுது கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

இதில் கவர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். பின்னர், தெலுங்கில் படு பிசியாக வலம் வந்தார். கவர்ச்சியில் மிரள வைத்த ரம்யாகிருஷ்ணன் 2003ஆம் ஆண்டு வம்சி என்ற இயக்குனரை திருமணம் செய்தார். 

ரம்யாகிருஷ்ணன் என்றாலே வில்லி கதாபாத்திரம் அல்லது பக்தி படங்களில் சாமி வேடம் என்று தான் அனைவருக்கும் தெரியும். அவரது படையப்பா திரைப்படம் மிகவும் பிரபலமானது. நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். இதில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் சம்பளமாக 11 லட்சம் பெற்று உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neelambari salary in padaiyappa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->