அடேய் நான் வில்லன் டா.!! பகத் பாசிலை தூக்கி வைத்து கொண்டாடும் நெடிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த மாமன்னன் படத்தில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம் என்பதால் அவரை முன்னிலைப்படுத்தி பிரம்மாண்டமாக உருவாக்க நினைத்து வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள் ஏராளமானோர் இந்த படத்தில் இடம் பெற்று இருந்தனர். மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மாமன்னன் படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இப்படம் ரிலீஸுக்கு முன்பே இயக்குனர் மாரி செல்வராஜ் இசை வெளியீட்டு விழாவின் போது கமல் முன்பே தேவர்மகன் படத்தை விமர்சித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. மேலும் இந்த படத்தில் தேவர்மகன் படத்தில் வரும் இசக்கி கேரக்டரை வைத்து தான் எடுத்துள்ளேன் எனக் கூறியது ஒரு சமூகத்தினரை கொந்தளிக்க செய்தது.

இதனை தொடர்ந்து மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29ம் தேதி வெளியான பிறகு படத்தை பார்த்த பெரும்பாலான மக்கள் நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரம் அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநயகருமான தனபாலின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை படமாக்கி இருப்பதாக கருத்து தெரிவித்தனர். சமூக நீதி, சமத்துவம் பற்றி அரசியல் பேசிய மாமன்னர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மாமன்னன் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்கள் கழித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 27ம் தேதி ரிலீஸ் ஆனது. தியேட்டரில் பார்க்காத பலர் ஓடிடியில் பார்த்ததால் மாமன்னன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படம் தான் தற்போது நெட்பிளிக்ஸில் இந்தியளவில் அதிகம் பார்க்கப்படும் படமாகவும், இந்திய அளவில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளது.

இதற்கு காரணம் மாமன்னன் படத்தில் சாதி வெறி பிடித்த வில்லன் கதாபாத்திரமான ரத்னவேலு என்ற பெயரில் பகத் பாசில் நடித்தது தான் என பரவலாக பேசப்படுகிறது. மாமன்னன் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசில் நடித்த ரத்தினவேல் மாஸ்ஸாக காட்டப்பட்டு இருப்பார்.

வில்லனாக நடித்த பகத் பாசில் கதாபாத்திரத்தை ஹீரோ போன்று கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பகத் பாசிலின் ரத்னவேல் எனும் வில்லன் கதாபாத்திரத்திற்கு பழைய இளையராஜா பாடல் முதல் புதிய மாஸ் பாடல்கள் வரை பின்னணியில் அமைத்து அந்த வீடியோக்களை நெடிஷன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்பொழுது சமூக வலைதளங்களில் பகத் பாசில் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

கொடூர வில்லனாக ரத்தினவேல் எனும் கதாபாத்திரமாக இயக்குனர் மாரி செல்வராஜ் காட்ட நினைத்து தற்பொழுது பகத் பாசிலை இணையதள வாசிகள் கொண்டாடி வருவதை மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியது போல "இந்த நிலை மாறனு" என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் மாரி செல்வராஜன் ட்விட்டர் பதிவில் அந்த வீடியோக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Netizens celebrating FahadhFaasil rathinavel character in maamannan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->