பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபலங்கள் - குழப்பத்தில் தவிக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழில் பிக் பாஸ் சீசன் 7 நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முறை போட்டி ஆரம்பத்திலிருந்து பரபரப்பாகப் போய்க் கொண்டுள்ளது. நேற்று பிக் பாஸில் இருந்து குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் ஐஷூ வெளியேற்றப்பட்டு இருக்கிறார். 

இதையடுத்து முதல் நாளான இன்று நாமினேஷன் புராசஸூம் தொடங்கி அதில், பூர்ணிமா, அக்‌ஷயா, விசித்ரா, மணி, விக்ரம், பிராவோ உள்ளிட்டோரது பெயர்கள் அதிகம் அடிபடுகிறது. 

அதுமட்டுமல்லாமல், இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் இரண்டு புது நபர்கள் இருப்பது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இந்த புரோமோவில் ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் சிருஷ்டி உள்ளிட்ட இரண்டு பேர் பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளனர். ஏற்கெனவே, நடைபெற்ற பல சீசன்களில் நடிகர் புகழ் பிக் பாஸ் இல்லத்திற்குள் போவார் என்று பேசப்பட்டது.

அதனால், தற்போது அவரும் சிருஷ்டியும் பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்திருப்பது போட்டியாளராகவா? என்று குழம்பி போய் உள்ளனர். ஒரு சிலர் அவர்கள் இருவரும் தீபாவளி ஸ்பெஷல் ஆக வந்திருக்கிறார்கள் என்றும் தெரியப்படுகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new candidates entered bigg boss season 7 house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->