என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தினார்.! துல்கர் குறித்து நித்யா மேனன் ஓபன் டாக்.!  - Seithipunal
Seithipunal


தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை நித்யாமேனன். கடைசியாக தமிழில் சைக்கோ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். 

நித்யாமேனனிற்கு ஓ காதல் கண்மணி படத்தின் மூலம், தமிழ் துறையில் ஒரு impact ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது என்றால் அது மிகையாகாது. அதன் பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர், நடிகர் விஜயுடன் மெர்சல் திரைப்படத்தில், இணைந்து நடிக்கும் வாய்ப்பை நித்யாமேனன் பெற்றார். அவர் அந்த படத்தில் நடித்திருக்கும் காட்சி மிகவும் வரவேற்பைப் பெற்றது. ஐஸ் என்ற கதாபாத்திரத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்து இருப்பார். 

நித்யாமேனன் அந்த படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மேலும், அவர் இறக்கும் காட்சியை பார்த்து கண் கலங்காத ரசிகர்களே இல்லை. அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையால் அந்த படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். அதன் பின்னர் சில மலையாள படங்களில் நடித்து வந்துள்ளார்.

nithya menon hot

இந்த நிலையில், அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், "என்னுடன் நடித்த பொழுது நடிகர் துல்கர் சல்மான் நடிப்பதை தூக்கிபோட்டுவிட்டு சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு கல்யாண வாழ்வில் செட்டில் ஆகி விடு என்று அறிவுரை செய்யததாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithya menon speech about dhulkar salman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->